அப்படி என்னா சார் பிரச்சனை இந்த ஐ.டி துறையில்?
அண்மையில் வந்த செய்தி பல ஐ.டி நிறுவனத்தில் இருந்து பலர் வேலையை விட்டு அனுப்படுகிறார்கள். இந்த சிக்கலுக்கு "லாப வெறி/அதீத லாப நோக்கு" என்று ஒற்றை வார்த்தை சொல்லி எளிதாக கடக்க முடியும். ஆனால் அப்படி கடந்து செல்வது பிரச்சனையின் மையத்தை அறிய முடியாது. எந்த ஒரு நிறுவனமும் தேவை சரியும் போது, நட்டம் அடையும் போது, அதீத உற்பத்தி நடக்கும் போது ஆட் குறைப்பு செய்வதை கண்டு இருப்போம். ஆனால் இதில் எதுவுமே நடக்காமல் ஆட் குறைப்பு செய்வதை ஐ.டி துறையில் மட்டுமே பார்க்க முடியும். இதை புரிந்து கொள்ள ஐ.டி துறைக்கு வருமானம் எப்படி வருகிறது என்பதை முதலில் அறிய வேண்டும். இந்தியாவில் பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள் பிற நிறுவனங்கள் outsource செய்யும் வேலைகள் மூலமே வருமானம் வருகிறது. ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் வருவாயில் 3- 7% ஐ.டிக்கு(Technology work) என்று ஒதுக்கீடு செய்வார்கள், அந்த ஒதுக்கீட்டை தங்களுகான வருமானமாக மற்ற பல ஐடி நிறுவனங்கள் போட்டியிடும். இந்த போட்டியில் வெற்றி பெற பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை Benchயில்(எந்த வேலையும் இல்லாமல் - சம்பளம் மட்டும் வாங்கும் ஊழியர்கள்) வைத்திருப்பார்கள்.
Thank you so much for this valuable information
ReplyDeleteyour always welcome to follow my blog regularly.................
Delete