அப்படி என்னா சார் பிரச்சனை இந்த ஐ.டி துறையில்?

அண்மையில் வந்த செய்தி பல ஐ.டி நிறுவனத்தில் இருந்து பலர் வேலையை விட்டு அனுப்படுகிறார்கள். இந்த சிக்கலுக்கு "லாப வெறி/அதீத லாப நோக்கு"  என்று ஒற்றை வார்த்தை சொல்லி எளிதாக கடக்க முடியும். ஆனால் அப்படி கடந்து செல்வது பிரச்சனையின் மையத்தை அறிய முடியாது.

எந்த ஒரு நிறுவனமும் தேவை சரியும் போது, நட்டம் அடையும் போது, அதீத உற்பத்தி நடக்கும் போது ஆட் குறைப்பு செய்வதை கண்டு இருப்போம். ஆனால் இதில் எதுவுமே நடக்காமல் ஆட் குறைப்பு செய்வதை ஐ.டி துறையில் மட்டுமே பார்க்க முடியும்.

இதை புரிந்து கொள்ள ஐ.டி துறைக்கு வருமானம் எப்படி வருகிறது என்பதை முதலில் அறிய வேண்டும். இந்தியாவில் பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள் பிற நிறுவனங்கள் outsource செய்யும் வேலைகள் மூலமே வருமானம் வருகிறது. ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் வருவாயில் 3- 7% ஐ.டிக்கு(Technology work) என்று ஒதுக்கீடு செய்வார்கள், அந்த ஒதுக்கீட்டை தங்களுகான வருமானமாக மற்ற பல ஐடி நிறுவனங்கள் போட்டியிடும். இந்த போட்டியில் வெற்றி பெற பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை Benchயில்(எந்த வேலையும் இல்லாமல் - சம்பளம் மட்டும் வாங்கும் ஊழியர்கள்) வைத்திருப்பார்கள்.

இது போன்ற பல நிறுவனங்களில் போட்யிட்டு வரும் பல projectகள் டாலர்/யூரோ மூலம் வர்த்தகம் நடைப்பெறும். இதன் மூலம் குறைந்த இந்தியா ரூபாய் பரிமாற்ற விலையினால் பல மடங்கு வருவாயாக இந்தியாவில் மாறுகிறது. இந்த வருவாய் கொண்டு ஒரு விகிதாசாரத்தில் நிறைய Freshers,கணிசமான மத்திய நிலை ஊழியர்கள், ஒரு சில மூத்த ஊழியர்கள் உடைய அணி உடன் வேலை நடக்கும்.

இதில் Fresher's குறிப்பிட்ட ஆண்டுக்கு பின் team lead,module lead,manager என்று தொடர்ந்து coder என்கிற நிலையில் இருந்து முழு நிர்வாக பொறுப்புக்கு மறவேண்டிய நிர்பந்தம் இந்தியா மென்பொருள் நிறுவனங்களில் உள்ளது. இது பிறநாடுகளில் கிடையாது அங்கு ஒருவர் coder/Tester இருக்க விரும்பினால் வாழ்க்கை முழுவதும் இருக்க முடியும். இந்தியாவில் இது இல்லாத முக்கியமாக காரணம் 8-10 வருசம் பின் அவரை coderராக வைத்து இருந்தால் மிக அதிக செலவு அதற்கு பதில் 4 Fresher's வைத்து வேலைக்கு அமர்த்த முடியும். அதே போன்று இந்த இடைநிலை ஊழியர்களை Reskill படுத்துவது கூடுதல் செலவு என்பதால் நிறுவனங்கள் அதையும் செய்வது இல்லை.

இப்போ நடக்கும் பிரச்சனைக்கு  சொல்லப்படும் காரணங்கள் 1.)உலக பொருளாதார மந்தநிலை காரணமாக நிறுவனங்கள் புதிய ஐ.டி project செலவு செய்வதை தள்ளி வைத்து உள்ளனர். இதனால் புதிய projects வருவது தாமதம் ஆகிறது 2.) உலக முழுவதும் protectionism அரசுகள் அமைவதால் பல நாடுகளில் விசா பிரச்சனைகள் காரணமாக இந்தியா ஐ.டி நிறுவனங்கள் பலர் அந்த நாட்டை சேர்ந்த ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது 3.)இந்த ஊழியர்கள் புதிய தொழில்நுட்பம் ஏற்ப தங்களை தகவமைப்பு செய்யவில்லை.

இப்படி பல காரணம் சொன்னாலும் இதில் எந்த காரணமும் நிறுவனங்களுக்கு நட்டம் ஏற்படக்கூடிய இல்லை . இந்த நிறுவனங்கள் 20-28% லாபம் இன்று வரை அடைகின்றன. இந்த பிரச்சனைக்கு உரிய காரணங்களால் ஒரு சிறிய லாப விகிதம் குறைய வாய்ப்பு இருந்தாலும். அதை கடந்த சில மாதங்களாக இந்தியா ரூபாய் மதிப்பு குறைவால் அன்னிய செலாவணி மூலம் ஒரு கணிசமான கூடுதல் வருவாய் வருகிறது. அது மட்டும் இல்லாமல் எல்லா பெருநிறுவனங்கள் ஒரு பெரிய Reserve cash வைத்து உள்ளனர். இது சராசரியாக 20000 - 50000 கோடி வரை வைத்து உள்ளனர். அதுமட்டுமின்றி இதில் பல பெரிய நிறுவனங்கள் எந்த கடனும் இல்லை.

இவ்வளவு வலுவான நிதி நிலை அறிக்கை வைத்து கொண்டு ஏன் அப்போ ஊழியர்கள் வெளியேற்று வேண்டும்?

ஒவ்வொரு ஐ.டி நிறுவனத்தில் ஊழியர்கள் செலவு(ஊதியம்) 52-60% மொத்த செலவில். இந்த நிறுவனங்கள் எவ்வளவு ஊதிய குறைவான ஊழியர்கள் வைத்து project execute செய்ய முடியுமோ அந்த அளவுக்கு லாபம் விகிதம். அந்த வகையில் பல காரணங்கள் சொன்னாலும் இதற்கு பின் ஒழிந்து கொண்டு இருக்கும் முதற் காரணம் அதீத லாபம்.இதற்காக 10-15 ஆண்டுகளாக நல்ல ஊழியராக இருந்த ஒரு ஊழியர் ஒரே நாளில் மிகவும் மோசமான ஊழியர் என்று வெளியேற்ற படுவர்.அதுவும் "Non- performer" / "Un Skilled" என்று ஒரே வார்த்தையில் வெளியேற்றுவது அநீதியின் உச்சம்.

 இதை எதுவும் மாற்ற முடியாது,ஐ.டி வேலை என்றால் அப்படி தான் இருக்கும்,தனியார் நிறுவனம் என்றால் அப்படி தான் இருக்கும் என்று வசனங்கள் பாதிக்கப்படும் ஊழியர்கள் பேசுவது பிரச்சனையின் சிக்கல். 

இதற்கு தீர்வே இல்லையா? 

எந்த ஒரு தீர்வும் உடனே எதோ ஒரு தனிமனிதன் மூலமாக நடப்பதும் இல்லை/நடக்க போவதும் இல்லை . அது ஒரு தொடர் நீண்ட கூட்டு செயல்பாட்டால் மட்டுமே சாத்தியம்.

அதை நோக்கி பயணிப்போம்!

Comments

 1. Great Article. Thank you for sharing! Really an awesome post for every one.

  IEEE Final Year projects Project Centers in Chennai are consistently sought after. Final Year Students Projects take a shot at them to improve their aptitudes, while specialists like the enjoyment in interfering with innovation. For experts, it's an alternate ball game through and through. Smaller than expected IEEE Final Year project centers ground for all fragments of CSE & IT engineers hoping to assemble. Final Year Project Domains for IT It gives you tips and rules that is progressively critical to consider while choosing any final year project point.

  JavaScript Training in Chennai

  JavaScript Training in Chennai

  ReplyDelete
 2. Shop from USA to India Wide Variety of imported Products at Online Indian Market with Cheap and Best Price.

  ReplyDelete

Post a Comment

please place ur views...........